“பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதுமே இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” - கவர்னர் ஆர்.என்.ரவி


“பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதுமே இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” - கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 6 May 2022 3:23 PM IST (Updated: 6 May 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதுமே இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை,

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய ‘தி லர்கிங் ஹைட்ரா’ (The Lurking Hydra) என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் சமூக அமைதியை குலைக்க சில அமைப்புகள் முயன்று வருவதாக குற்றம் சாட்டினார். பயங்கரவாதத்திற்கு எதிராக எப்போதுமே இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது என்று தெரிவித்த அவர், இந்த புத்தகம் இந்திய ராணுவத்தின் சிறப்புகளைப் பற்றிய சிறந்த ஆவணமாக இருக்கும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

Next Story