இந்த இயக்கம் மிகவும் ஆபத்தான இயக்கம்...! கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு


இந்த இயக்கம் மிகவும் ஆபத்தான இயக்கம்...! கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 May 2022 4:04 PM IST (Updated: 6 May 2022 4:04 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவியின் அரசியல் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.

சென்னை

சென்னையில்  சென்னை, நுங்கம்பாக்கத்தில் நூல் வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு கவர்னர்  ஆர்.என்.ரவி பேசியதாவது: -

அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுகிறவர்கள் பயங்கரவாதிகள். அரசியல் லாபத்துக்காக வன்முறையை தூண்டுவதை ஏற்க முடியாது. அது மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, காஷ்மீரில் இருந்தாலும் சரி, வடகிழக்கில் இருந்தாலும் சரி, இந்த நாட்டில் வன்முறையை அரசியல் ஆதாரமாக பயன்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் பயங்கரவாத அமைப்பாகும் .

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கம் மிகவும் ஆபத்தானது.  மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கங்கள் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகின்றனர். பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாகவும் செயல்படுகிறது. நாட்டை சீர்குலைப்பதுதான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நோக்கம். இவ்வாறு கவர்னர்  ஆர்.என்.ரவி பேசினார். 

யுத்தத்துக்கு ஆள் அனுப்புகிறது மேலும் சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் யுத்தம் நடத்தவும் பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபடவும் ஆட்களை அனுப்புகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா. இதனை சில கட்சிகள் ஆதரிப்பது பெரும் தவறு; ஆபத்தானது. நாட்டுக்கு அச்சுறுத்தலானது என்றும் கவர்னர்  ஆர்.என்.ரவி கூறினார். 

கவர்னர் ஆர்.என்.ரவியின் இந்த அரசியல் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. 



Next Story