1-9 ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறை எப்போது? பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


கோப்புப் படம் (பிடிஐ)
x
கோப்புப் படம் (பிடிஐ)
தினத்தந்தி 6 May 2022 11:32 AM GMT (Updated: 6 May 2022 12:37 PM GMT)

ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு  வரும்  மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ள பள்ளிக் கல்வித்துறை,  11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாகவும், பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story