தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
தமிழகத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு 58 ஆக பதிவான நிலையில் இன்று தொற்று பாதிப்பு 64 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று உயர்ந்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 58 ஆக பதிவான நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்து 64- ஆக உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 54 ஆயிரத்து 217- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 56 பேர் இன்று குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 17 ஆயிரத்து 701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 34 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story