காதலிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த வாலிபர்
காதலிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருபுவனை
காதலிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
திருபுவனை பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி, முத்தியால்பேட்டை பாரதிதாசன் பெண்கள் கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று அவர், கல்லூரிக்கு சென்று விட்டு தனியார் பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பஸ்சில் திருபுவனை அருகே உள்ள கொத்தபுரிநத்தம் பகுதியை சேர்ந்த நவீன், அவரது நண்பர்கள் ஹரி, சாந்தகுமார், பிரதாப் ஆகியோரும் பயணம் செய்தனர்.
கன்னத்தில் அறை
அப்போது அவர்கள் ரகளையில் ஈடுபட்டதுடன் தன்னை காதலிக்குமாறு நவீன் கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அத்துடன் அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து நவீனை இறக்கி விட்டனர்.
இதுகுறித்து அந்த மாணவி, திருபுவனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க வலியுறுத்தி ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை வாலிபர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story