திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு: நாளை புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் முதல் அமைச்சர்?
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கடந்த மே மாதம் 7 ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின், நாளை கலைஞர் நினைவிடம் செல்கிறார். பின்னர் சட்டபேரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், பேரவை வளாகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மானியக்கோரிக்கை விவாதம் நடைபெறும் நிலையில் நாளை கேள்வி நேரம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை தொடங்கியதும் நேரமில்லா நேரமாக எடுத்துகொள்ளப்படும்போது, அரசின் செயல்பாடுகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பேரவை நிகழ்வுகள் முடிந்த பின் அறிவாலயம் செல்லும் முதலமைச்சர், திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்களை பெறவுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story