தமிழக ஆளுநருடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு


தமிழக ஆளுநருடன் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு
x
தினத்தந்தி 6 May 2022 9:23 PM IST (Updated: 6 May 2022 9:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்து பேசியுள்ளார்.







சென்னை,



தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் இன்று சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து உள்ளார்.  தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச நிகழ்வானது இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டு உள்ளார்.  தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

தருமபுரம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நல்ல முடிவை எடுத்திடுவார் என  இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் அளித்துள்ள பேட்டியில், ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை.  காவித்தமிழாகவே தமிழ் வளர்ந்தது.  கருப்புத்தமிழாக வளரவில்லை.  தமிழை போற்றினால் காவியையும் சேர்த்து போற்ற வேண்டும்.  தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.


Next Story