கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறந்த விவகாரம்: தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு
கழிவுநீர் தொட்டியில் தொழிலாளி இறந்த விவகாரம்: தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
சென்னை,
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் (மாதவரம் தொகுதி), காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர் தொகுதி), இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராமச்சந்திரன் (தளி தொகுதி) ஆகியோர், ஆவடி மாநகராட்சி பருத்திப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி வேலை பார்த்த தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி இறந்தது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள்.
அதற்கு பதில் அளித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு என்.எஸ்.கே. கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி முத்துக்குமரன் விஷவாயு தாக்கி மரணமடைந்தார். அவரை காப்பாற்ற முயன்ற குணசேகரன் மயக்கமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியை தனியார் ஒப்பந்த நிறுவனம் ஊழியர்களை அனுப்பி செய்துள்ளது. ஆனால், மாநகராட்சியிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. இந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரண உதவியை பெற்று இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story