துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்
29சி பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன்.
சென்னை
முதல் -அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டசபையில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; இந்த ஓராண்டு மக்களுக்காக உண்மையாக உளமாற உழைத்தேன். துளி போன்ற ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம்.தமிழக மக்களுக்கு உண்மையாக உழைத்திருக்கிறேன் என்ற மனநிறைவு உள்ளது. திமுக ஆட்சியின் திட்டங்கள் சென்று சேராத மாவட்டங்களே இல்லை என்ற நிலை உள்ளது
ஆட்சிப் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி; எங்கோ ஒரு மூலையிலிருந்து, இங்கு என்னை நிற்க வைக்கும் திமுக தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி உள்ளேன். நான் கலைஞர் அல்ல, அவரை போல் எனக்கு பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் அவரை போல் உழைக்க தெரியும்.
இலவச பேருந்து பயண திட்டத்தால் பெண்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
என் வாழ்வில் மறக்க முடியாதது 29சி பேருந்து, அந்த பேருந்தில்தான் பள்ளிக்கு சென்று வந்தேன். 29சி பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து 3 வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது.
106.34 கோடி பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்; வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இலவச பயணம் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 மிச்சமாகியுள்ளது; இதுவே அரசின் உண்மையான சாதனை.
கொரோனா கால உதவித்தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூ.3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
திமுகவின் ஓராண்டு ஆட்சியில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68,800 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.என கூறினார்.
Related Tags :
Next Story