பாம்பன் பாலத்தில் கார்-பைக் நேருக்கு நேர் மோதல் - தூக்கி வீசப்பட்ட நபர் கடலில் விழுந்தார்...!
பாம்பன் பாலத்தில் கார்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளார்.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் பாம்பன் பாலத்தில் கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனம் பாலத்தின் நடைபாதை மீது ஏறி மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் கடலில் தூக்கி வீசப்பட்டு படுகாயத்துடன் உயிர்தப்பினார்.
பின்னர், விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story