திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் - 63 நாயன்மார்கள் வீதி உலா


திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பிரம்மோற்சவம் - 63 நாயன்மார்கள் வீதி உலா
x
தினத்தந்தி 7 May 2022 2:38 PM IST (Updated: 7 May 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் நாயன்மார்கள் வீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று திருவிழாவின் 3-வது நாளையொட்டு 63 நாயன்மார்களின் வீதி உலா நடைபெற்றது. 

இந்த விழாவைக் காண பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாயன்மார்களின் வீதி உலா நடைபெற்ற போது சில இடங்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Next Story