தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 55 ஆயிரம் டன் நிலக்கரி
விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு 55 ஆயிரம் டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும். நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய விசாகப்பட்டினத்தில் இருந்து 55 ஆயிரம் டன் நிலக்கரி கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு வந்து சேர்ந்த இந்த நிலக்கரியை வைத்து, 5 அலகுகளையும் முழுமையாக இயக்க முடியாது என்றும், இதை ஓரிரு நாட்கள் மட்டுமே மின் உற்பத்திக்கு பயப்படுத்த முடியும் என்றும் அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story