கோழியை துரத்தி சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிருடன் மீட்பு...!


கோழியை துரத்தி சென்ற போது கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிருடன் மீட்பு...!
x
தினத்தந்தி 7 May 2022 3:19 PM IST (Updated: 7 May 2022 3:19 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிருடன் மீட்கப்பட்டு உள்ளார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஆட்டோ டிரைவாக உள்ளார். இவரது மகள் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி இன்று காலை கோழியை பிடிக்க துரத்தி சென்று போது அப்பகுதியில் உள்ள 100 அடி ஆழம் கிணற்றின் தவறி விழுந்து உள்ளார்.

கிணற்றுக்குள் தத்தளித்த  மாணவி தன்னை காப்பாற்ற கோரி சத்தம் போட்டு உள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் ஒருவர் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டு கிணற்றில் உள்ள படி கல்லில் உட்கார வைத்து உள்ளார்.

பின்னர் இதுகுறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து மாணவி உட்பட இரண்டு பேரையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.


Next Story