வங்கக்கடலில் வலுப்பெறும் புயல்... தமிழகத்துக்கு எச்சரிக்கையா?
தெற்கு அந்தமான், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக மாறுமென என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உள்ளது. நாளைய தினம் புயலாக வலுபெறும் நிலையில், வரும் 10 ஆம் தேதிக்கு பிறகு ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் கனமழையும், 10 மற்றும் 11 தேதிகளில், மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story