தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது


தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 7 May 2022 10:28 PM IST (Updated: 7 May 2022 10:28 PM IST)
t-max-icont-min-icon

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம்
அரியாங்குப்பம் ஓடைவெளி சின்ன வீராம்பட்டினம் ரோடு பகுதியை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்புகுழுவினர் கடந்த 2013-ம் ஆண்டு அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
ஆந்திராவில் கைது
இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே ஆந்திர மாநிலத்தில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். பின்னர் அவரை புதுச்சேரி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story