வேளாண்துறை குடோனில் பொருட்கள் திருட்டு
தாவரவியல் பூங்கா வேளாண்துறை குடோனில் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
புதுவை தாவரவியல் பூங்காவில் வேளாண்துறையின் குடோன் உள்ளது. அந்த குடோனில் செடிகளுக்கு தண்ணீர் தெளிக்கும் ஸ்பிரேயர், மரம் வெட்டும் கருவிகள், புல் வெட்டும் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. சம்பவத்தன்று யாரோ மர்ம ஆசாமிகள் குடோனின் பூட்டை உடைத்து கருவிகளை திருடி சென்றுவிட்டனர். மறுநாள் பணிக்கு வந்த ஊழியர்கள் குடோன் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதையும், பொருட்கள் திருடு போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குனர் சிவராமன், ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story