தேமுதிக தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த நபர் - தண்ணீர் இல்லாததால் கொளுத்தியதாக வாக்குமூலம்
தண்ணீர் இல்லாததால் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தியதாக கைது செய்யப்பட்ட ராமு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை,
சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தேமுதிக அலுவலகம் முன்பு, அக்கட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர், மோர் பந்தல் கடந்த 4 ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த பந்தல் தீப்பற்றி எரிந்து நாசமானது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர், தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தண்ணீர் இல்லாததால் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ராமுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story