“மாநகராட்சிகளில் ரூ.24000 கோடியில் புதிய திட்ட பணிகள்” - அமைச்சர் கே.என்.நேரு


“மாநகராட்சிகளில் ரூ.24000 கோடியில் புதிய திட்ட பணிகள்” - அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 8 May 2022 6:26 PM IST (Updated: 8 May 2022 6:26 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சிகளில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் கோவை மாநகராட்சியில் 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றுள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மேலும் 49 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 263 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் ஓடைகள் அமைப்பதற்கும், குடிநீர் குழாய்கள் அமைப்பதற்கும், பாதாள சாக்கடை மற்றும் குப்பைக்கிடங்குகளை சீர் செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story