காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று ஓம் சக்தி சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி அ.தி.மு.க. மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் தி.மு.க. தனது தோல்வி பயத்தாலும் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த முயன்று வருகிறது. அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
எதற்கெடுத்தாலும் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை குறைகூறும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த முரண்பாடு குறித்து வாய்திறக்க மறுப்பது ஏன்?. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?. இதிலிருந்து எந்த அளவிற்கு புதுச்சேரியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முரண்பாடாக உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல், புதுச்சேரியில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருப்பது அரசியல் ஏமாற்றும் வேலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story