தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்த டிரைவர் கைது


தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்த டிரைவர் கைது
x
தினத்தந்தி 9 May 2022 12:39 AM IST (Updated: 9 May 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்த டிரைவர் கைது குடிக்க தண்ணீர் இல்லாததால் ஆத்திரம்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காரில் வந்து இறங்கும் ஒருவர், தண்ணீர் பந்தலில் தண்ணீர் குடிக்க வருவதும், பின்னர் அவர் தண்ணீர் பந்தலை தீ வைத்து எரித்து விட்டு செல்வதும் பதிவாகி இருந்தது. அந்த காட்சியை வைத்து வேளச்சேரியை சேர்ந்த ராமு (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கார் டிரைவரான ராமு, சம்பவத்தன்று இரவு போதையில் காரை நிறுத்தி விட்டு தண்ணீர் குடிப்பதற்காக தே.மு.தி.க. அலுவலகத்தில் இருந்த தண்ணீர் பந்தலுக்கு சென்றார். ஆனால் அங்கு தண்ணீர் இல்லாததால் ஆத்திரத்தில் தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்துவிட்டு சென்றது தெரிந்தது. கைதான ராமு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story