உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலி: மதுரை ராணுவ வீரரின் உடல்தகனம்


உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலி: மதுரை ராணுவ வீரரின் உடல்தகனம்
x
தினத்தந்தி 9 May 2022 1:26 AM IST (Updated: 9 May 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் நடந்த விபத்தில் பலி: மதுரை ராணுவ வீரரின் உடல்தகனம்.

மதுரை,

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் முரளி மனோகரன் (வயது 29). உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி மதுராவில் பணி முடிந்து முரளி மனோகரன் மோட்டார் சைக்கிளில் குடியிருப்புக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கண்கள், இதயம், கல்லீரல் ஆகியவை அவரது மனைவியின் ஒப்புதலோடு தானம் செய்யப்பட்டது. அவை ராணுவ ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. முன்னுரிமை அடிப்படையில் தேவைப்படுபவர்களுக்கு உடல் உறுப்புகள் தானம் செய்யப்படும். இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகிறார்கள்.

இதையடுத்து அவரது உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பேரையூருக்கு கொண்டு வரப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.



Next Story