ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு பா.ம.க. நிர்வாகி தீக்குளித்ததால் பரபரப்பு
ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. நிர்வாகி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில் 259 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 29-ந்தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி படிப்படியாக வீடுகள் இடிக்கப்பட்டு வரும் நிலையில் குடியிருப்பினரும் விடாப்பிடியாக உள்ளனர். தற்போது வரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
தீக்குளிப்பு
அந்த பகுதியில் வசித்து வரும் கண்ணையா (வயது 55) பழக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டை இடித்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் அதிகாரிகள் வீடுகளை இடிக்க வந்தபோது கண்ணையா திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து ஆம்புலனஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் கண்ணையா மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 92 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ம.க. நிர்வாகி
இதையடுத்து கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோர் தீக்காயமடைந்த கண்ணையாவை ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
தீக்குளித்த கண்ணையா பா.ம.க.வின் தென் சென்னை மாவட்ட துணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தீக்குளித்ததை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதனால் 3 போலீசார் காயமடைந்ததாக தெரிகிறது. மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் சேதமடைந்தன.
தற்கொலை முயற்சிக்கு பிறகு இளங்கோ நகரில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பாதுகாப்புக்காக 300-க்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.
டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ‘டுவிட்டர்’ பதிவில், “சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் அவர்கள், சென்னையின் பூர்வகுடிகள். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து சென்னையை விட்டு வெளியேற்றுவது மனித உரிமை மீறல். அதை அனுமதிக்க முடியாது. வீடுகள் இடிக்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.
அதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆகியோரும் குடியிருப்புகளை அகற்றும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Related Tags :
Next Story