திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கம்பியில் கார் மோதி விபத்து - 2 பேர் உயிரிழப்பு
மணப்பாறை அருகே சாலையோர தடுப்பில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.
திருச்சி,
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 34) மற்றும் இவரது நண்பர்களான ஏழுமலை (29), கவியரசு( 3), சுரேஷ் (40), காமராஜ் ( 39), கார்த்தி (29), மற்றும் செல்வகுமார் ( 32) உள்ளிட்ட 7 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
கார் விபத்து
அவர்கள் வந்த கார் இன்று நள்ளிரவில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.
இருவர் பலி
இந்த விபத்தில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே படுகாயம் அடைந்த ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் காயமடைந்த 5 பேரும் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story