கணவரிடம் இருந்து நகையை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்...!
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ராமேஸ்வரத்தை சேர்ந்த உமா மகேஸ்வரி என்வர் இன்று காலை வந்தார். கலெக்டர் அலுவலகத்தின் வளாகத்தில் காத்திருந்த அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாதுபாப்பு பணியில் இருந்த போலீசார், பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
இது தொடர்பாக போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், கணவரிடம் இருந்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை மீட்டு தர வலியுறுத்தி அவர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story