சேனைக்கிழங்கில் பூத்த அதிசயப் பூ - பொதுமக்கள் வியப்பு..!


சேனைக்கிழங்கில் பூத்த அதிசயப் பூ - பொதுமக்கள் வியப்பு..!
x
தினத்தந்தி 9 May 2022 4:18 PM IST (Updated: 9 May 2022 4:18 PM IST)
t-max-icont-min-icon

சேனைக்கிழங்கில் பூத்துள்ள அதிசயப் பூவை பொதுமக்கள் ஆர்வமாக கண்டு சென்றனர்.

சேலம் மாவட்டம்,

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் வடகாட்டை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது தோட்டத்தில் விளைந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்து வீட்டில் பதப்படுத்தி வைத்து இருந்தார்

இந்த நிலையில் அதிசயிக்கும் வகையில்  சேனை கிழங்கிலிருந்து, ஒரு அடி உயரத்தில் அழகான தோற்றத்தில் ஒற்றைப்பூ பூத்துள்ளது.

இந்த பூ  விவசாயிகளிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேனைக்கிழங்கின்  பூவை காண்பதற்கு இப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story