கணவரை இழந்த 2 பெண்களுக்கு ரூ.68 லட்சம் இழப்பீடு- லோக் அதாலத் கோர்ட்டு தீர்ப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 May 2022 7:16 PM IST (Updated: 9 May 2022 7:16 PM IST)
t-max-icont-min-icon

தானேயில் ஒரே நாளில் கணவரை சாலை விபத்தில் பறிகொடுத்த 2 பெண்களுக்கு இழப்பீடாக ரூ.68 லட்சத்துக்கும் அதிகமான தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தானே, 
  தானேயில் நடைபெற்ற தேசிய லோக் அதாலத் கோர்ட்டு விசாரணையில், மாவல் மற்றும் தானேயில் ஒரே நாளில் கணவரை சாலை விபத்தில் பறிகொடுத்த 2 பெண்களுக்கு, இழப்பீடாக ரூ.68 லட்சத்துக்கும் அதிகமான தொகையை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
  முதல் வழக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாவல் பகுதியில் சாலை விபத்தில் பலியான ஆனந்த் என்பவரின் மனைவி சாரிகா தோரட்(வயது32) என்பவருக்கு இழப்பீடாக ரூ.36 லட்சத்து 95 ஆயிரத்தை வழங்க உத்தரவிடப்பட்டது. 
  மற்றொரு வழக்கில், அதே நாளில் தானேயில் சாலை விபத்தில் உயிரிழந்த முகமத் சலிம் என்பவரின் மனைவியான சபானா அன்சாரிக்கு ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது. 
  அதிகபட்சமாக கடந்த 2017-ம் ஆண்டு கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில், கணவர் சேத்தன் என்பவரை இழந்த அவரது மனைவி பாவனா ராஜ்புத் என்பவருக்கு ரூ.75 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story