தேர்வில் பிட்டு அடிப்பதற்கு முன்னால் கோவிலில் பூஜை செய்த மாணவர்..!
தேர்வில் பிட்டு அடிப்பதற்கு முன்னால் கோவிலில் பூஜை போட்ட மாணவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து ஒரு மாணவர் தேர்வு எழுதுவதற்கு முன்பாக அந்த தேர்வுக்கான பிட்டு துண்டு சீட்டுகளை எடுத்துச் செல்ல முடிவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த மாணவர் பள்ளிக்கு செல்வதற்கு முன்னால் கோவில் ஒன்றில் அந்த பிட்டு சீட்டுகளை வைத்து கற்பூரம் ஏற்றி கும்பிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட மாணவர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குன்னத்தூரில் இருந்து வீடியோ வெளியாகிய நிலையில் வீடியோவில் உள்ள நபர் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story