தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 10:18 PM IST (Updated: 9 May 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 47). இவரது மனைவி பிரபாவதி. இவர்களது மகன் பிரவீன் (24). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பிரபாவதி கண்டித்தார். இதில் மனமுடைந்த பிரவீன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story