தலைமறைவாக இருந்த சிறுவன் கோர்ட்டில் சரண்


தலைமறைவாக இருந்த சிறுவன் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 9 May 2022 10:36 PM IST (Updated: 9 May 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

தண்டவாளத்தில் வெடிகுண்டு வெடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த வந்த சிறுவன் கோர்ட்டில் சரண் சரணடைந்தான்.

புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு பள்ளி பின்புறம் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 5-ந் தேதி நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இதுகுறித்து உருளைன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வெடிகுண்டு வைத்ததாக சின்ன கொசப்பாளையம் ரிஷிக்குமார் (வயது 22), பெரியார் நகர் கவுதம் (23), அரவிந்த் (23), கவியரசன் (22) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருசாம்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் (28) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் 17 வயது சிறுவன் இன்று புதுச்சேரி கோர்ட்டில் சரணடைந்தான். அவனை போலீசார் கைது செய்து அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மேலும் அரவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story