நெல்லை: கரடி கடித்து குதறியதில் விவசாயி படுகாயம்..!


நெல்லை: கரடி கடித்து குதறியதில் விவசாயி படுகாயம்..!
x
தினத்தந்தி 10 May 2022 10:46 AM IST (Updated: 10 May 2022 10:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே கரடி கடித்து குதறியதில் விவசாயி ஒருவர் படுகாயமடைந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இன்று அதிகாலை  வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது தீடீரென கரடி ஒன்று  சக்திவேல் மீது பாய்ந்தது. இதில் அவர்  நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்தவரை  கரடி கடித்து குதறியதால்  அதிர்ச்சி அடைந்த அவர்  சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்து தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்  ஓடி வந்து கரடியை விரட்டினர். கூட்டத்தை பார்த்ததும் கரடி தப்பி ஓடி விட்டது. 

கரடி கடித்ததால்  ரத்தம் சொட்ட, சொட்ட தவித்து கொண்டிருந்த சக்திவேலை மீட்டு, களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு 19 தையல் போட்டுள்ளதாகவும், கரடியின் 6 பற்கள் அவரது கையில் பதிந்துள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

ஆட்கள் வராவிட்டால் சக்திவேல் கரடியிடம் சிக்கி உயிரிழந்திருப்பார்.  இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே கடும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதுபற்றி விவசாயி சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி பாஸ்கர் கூறுகையில்,

ஏற்கனவே இப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை, கடமான்கள் அட்டகாசம் செய்து வருகின்றன. வனவிலங்குகள் அட்டகாசம் குறித்து வனத்துறையிடமும், கலெக்டரிடமும் பலமுறை மனுக்கள் மூலம் முறையீடு செய்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வனவிலங்குகளை விரட்டாமல் அலட்சியம் காட்டும் வனத்துறையினர் தற்போது விவசாயிகளின் உயிரோடு விளையாடி வருகின்றனர். வனத்துறை, மாவட்ட நிர்வாகத்தில் தொடர் அலட்சியத்தால் விவசாயிகள் உயிர் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, என்று கூறினார்.

Next Story