மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் பலி


மின்சாரம் தாக்கி பஸ் டிரைவர் பலி
x

கரையாம்புத்தூர் அருகே கோவிலில் சாமி கும்பிட சென்ற பஸ் டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

கரையாம்புத்தூர் அருகே கோவிலில் சாமி கும்பிட சென்ற பஸ் டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
தனியார் பஸ் டிரைவர்
புதுச்சேரி மாநிலம் மடுகரை ராம்ஜி நகர் பெரியபேட் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சத்யராஜ் புதுச்சேரியில் இருந்து கரையாம்புத்தூர் செல்லும் தனியார் பஸ்சை ஓட்டி வந்தார். 
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து சின்ன கரையாம்புத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பஸ்சை நிறுத்திவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். இன்று அதிகாலையில் மீண்டும் பஸ்சை எடுப்பதற்காக சென்றார்.
மின்சாரம் தாக்கியது
வழக்கமாக அப்பகுதியில் உள்ள நாகம்மாள் கோவிலில் பஸ்சை நிறுத்தி கற்பூரம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி இன்றும் அவர் பஸ்சை நிறுத்தி விட்டு சாமி கும்பிட கற்பூரத்துடன் சென்றார். 
இதற்கிடையே அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவுக்காக தெருக்கள் முழுவதும் சீரியல் பல்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நாகாத்தம்மன் கோவிலிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சத்யராஜ் சாமி கும்பிட கோவிலின் இரும்பிலான கேட்டை திறந்தபோது மின்கசிவு காரணமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
போலீசார் விசாரணை
இதனால் சுருண்டு விழுந்த அவரை பஸ் கண்டக்டர் சரவணன் ஓடி வந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சத்யராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story