கவர்னர் தமிழிசையுடன் ரங்கசாமி சந்திப்பு


கவர்னர் தமிழிசையுடன் ரங்கசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 10 May 2022 6:13 PM GMT (Updated: 2022-05-10T23:43:35+05:30)

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார்.

புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்று ஓராண்டு முடிந்து 2-வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் நிர்வாகம் தொடர்பாக ஆலோசித்தனர். மேலும் முதல்-அமைச்சராக பதவியேற்று ஓராண்டு நிறைவு  செய்த  ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் வாழ்த்து தெரிவித்தார்.

Next Story