திடீர் மழையால் மின்சாரம் துண்டிப்பு: சென்னையில் மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னையில் நேற்று பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட மின்சார துண்டிப்பு மற்றும் சிக்னல் கோளாறால் சென்னையில் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னையில் அசானி புயலின் தாக்கத்தால் நேற்று திடீர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் திடீர் மழையால் நேற்று போக்குவரத்து நெரிசலும் கடுமையாக காணப்பட்டது.
இந்த நிலையில் மின்சார ரெயில் சேவைகளும் நேற்று காலை 10 முதல் 20 நிமிடங்கள் வரை முடங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சிக்னல் கோளாறு காரணமாக தான் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது என்றும், அது ரெயில்வே அதிகாரிகளின் சீரிய முயற்சியால் விரைந்து சரி செய்யப்பட்டது எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
மின்சாரம் துண்டிப்பு
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் நேற்று அதிகாலை பெய்த திடீர் மழையாலும், அதிக காற்று அடித்ததாலும் பல்வேறு இடங்களில் மின்சார துண்டிக்கப்பட்டது. இதனால் சில ரெயில் நிலையங்களில் மின்சார தடைபட்டது. மேலும் சிக்னல் கோளாறும் ஏற்பட்டது. இதனால் நேற்று 18 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் 22 மின்சார ரெயில்கள் சேவை 10 முதல் 20 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story