நெய்வேலி அனல்மின் நிலைய பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்
நெய்வேலி அனல்மின் நிலைய பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் பட்டதாரி நிர்வாக பயிற்சியாளர் பணிக்கான 300 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதியாக பொறியியல் பட்டதாரி திறனாய்வு தேர்வில் (கேட்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘இந்த தகுதி தேவைகள் கேட்கப்படுவது இதுவே முதல் முறை’ என தவறாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளுக்கும் இதே வரைமுறைகள்தான் பின்பற்றபட்டது. இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளதாக தெரிகிறது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து நிர்வாக பயிற்சியாளர் பணிக்கான தகுதி தேவையில் ‘கேட்' தேர்வு கட்டாயமாதல் பற்றிய அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே தேர்வு நடைபெறுவதற்கு முன்பு இதுதொடர்பான நிபந்தனைகள் பற்றி தெளிவுரை வழங்க வேண்டும்.
பிரதிநிதித்துவம்
அனல்மின் நிலைய பணிகளுக்கு நாடு முழுவதும் இருந்து விண்ணப்பம் செய்கிறார்கள். இதில் மற்ற விண்ணப்பதாரர்களுக்கும், உள்ளூர் விண்ணப்பதாரர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் பார்க்கப்படுவதில்லை.
முறையான ஆய்வுகளுக்கு பிறகு உள்ளூர்வாசிகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கப்படவில்லை என்று உங்கள் அமைச்சகம் கருதினால், புதிதாக அறிவிக்கப்படும் பணிகளில் உள்ளூர்வாசிகளுக்கு (அனல்மின் நிலையத்தின் மேம்பாட்டுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு) நிலையான ஒதுக்கீடு வழங்குவதை பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story