“அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள்” - அமைச்சர் பொன்முடி தகவல்
அரசு கலைக் கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பு ஊதிய பணியாளர்கள், மே மாதத்திற்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பணிக்கு வர வேண்டாம் என்று தொகுப்பு ஊதிய ஊழியர்களுக்கு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என்றார். மேலும் எதிர்காலத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story