தொழிலாளி அடித்துக்கொலை: திருமணம் செய்து வைக்காததால் மகன் வெறிச்செயல்..!


தொழிலாளி அடித்துக்கொலை: திருமணம் செய்து வைக்காததால் மகன் வெறிச்செயல்..!
x
தினத்தந்தி 11 May 2022 9:36 AM IST (Updated: 11 May 2022 9:36 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே தந்தையை மகன் அடித்து கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 75). இவரது மகன் ஜான்சன் (39) தனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என அடிக்கடி வீட்டில் தகராறு செய்தது வந்ததாக தெரிகிறது. 

கடந்த 7-ந் தேதி தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி லூர்துசாமியிடம் ஜான்சன் கூறியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன் கட்டையால் லூர்துசாமியை அடித்து கீழே தள்ளினார். 

இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லூர்துசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது இளையமகன் ஜான் பிரிட்டோ கொடுத்த புகாரின் பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான்சனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story