வேலூர்: அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய பெண் மின்சாரம் தாக்கி பலி..!


வேலூர்: அறுந்து கிடந்த மின்கம்பியை அகற்றிய பெண் மின்சாரம் தாக்கி பலி..!
x
தினத்தந்தி 11 May 2022 7:07 AM GMT (Updated: 2022-05-11T12:37:47+05:30)

சாலையில் அருந்து கிடந்த மின் கம்பியை அகற்ற முயன்ற பெண் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயிபகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மனைவி சாந்தி (வயது 50). அப்பகுதியில் நேற்று இரவு அடித்த பலத்த காற்று மற்றும் சாரல் மழை காரணமாக அப்பகுதியில் சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. 

இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியாக வந்த சாந்தி சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தனது கையால் அகற்ற முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்ததால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இதை கண்ட கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்பு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சாலையில் அறுந்துகிடந்த மின் கம்பியை அகற்ற முயன்ற பெண் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story