வீடுபுகுந்து தம்பதிக்கு சரமாரி கத்திவெட்டு
முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து தம்பதியை சரமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக வீடுபுகுந்து தம்பதியை சரமாரியாக கத்தியால் வெட்டிய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கத்திவெட்டு
வில்லியனூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். அவரது மனைவி சந்திரா (வயது 55). இவர்களது மகன் சரவணன் (34). இவருக்கும், புதுவை வாழைக்குளம் பகுதியை சேர்ந்த வினோத் (21), அவரது தம்பி பவி என்ற அய்யப்பன் (20) மற்றும் விக்கி (19) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 3 பேரும் வீடு புகுந்து சந்திராவிடம் உனது மகன் எங்கே? என்று கேட்டுள்ளனர். அப்போது அவர் தனது மகன் வீட்டில் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சந்திராவை சரமாரியாக கத்தியால் வெட்டினர். மேலும் தடுக்க முயன்ற ரங்கநாதனையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.
3 பேருக்கு வலைவீச்சு
கத்திவெட்டில் காயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வினோத் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story