அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பூமிபூஜை


அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பூமிபூஜை
x
தினத்தந்தி 11 May 2022 5:48 PM GMT (Updated: 2022-05-11T23:18:13+05:30)

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட காட்டாமணிக்குப்பத்தில் அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பூமிபூஜை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட காட்டாமணிக்குப்பம் கோவில் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து கிடந்ததை பார்த்து அதனை கட்ட நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி சுற்றுச்சுவர், வகுப்பறைகள் பராமரிப்புக்காக ரூ.17 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பூமிபூஜை இன்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பணிகளை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை துணை இயக்குனர் நடனசபாபதி, ஆய்வாளர் மல்லிகா கோபால், உதவி பொறியாளர் அம்புரோஸ் பாக்கியசாலி, இளநிலை பொறியாளர் ஆனந்தன், பள்ளி முதல்வர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story