மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு


மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 6:24 PM GMT (Updated: 11 May 2022 6:24 PM GMT)

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்  கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. 

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 3,135 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 3,773 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 1500 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 106.94 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 107.06 அடியாக உள்ளது. 

Next Story