ஜிப்மர் அதிகாரிகள் தமிழ் கற்கவேண்டும்


ஜிப்மர் அதிகாரிகள் தமிழ் கற்கவேண்டும்
x
தினத்தந்தி 11 May 2022 6:32 PM GMT (Updated: 2022-05-12T00:02:17+05:30)

இந்தியை திணிக்க முயற்சியை கைவிட்டு ஜிப்மர் அதிகாரிகள் தமிழை கற்கவேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை பொதுச்செயலாளர் சந்திரமோகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் இயக்குனரின் இந்தி தொடர்பான சுற்றறிக்கைக்கு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, இந்தியை கட்டயாப்படுத்தவில்லை என்றும் முடிந்தவரை பயன்படுத்துங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இயக்குனரின் உத்தரவு அனைத்து வகையிலும் இந்தியை கொண்டு வருவதற்கான பிள்ளையார் சுழியாகும்.
புதுச்சேரிக்கு பணியாற்ற வரும் பிற மொழி மாநிலத்தவர்கள் குறிப்பிட்ட காலங்களில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதியின்படி மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மரில் பணியாற்றும் இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தமிழ் மொழியை கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி முதலில் ஜிப்மர் இயக்குனர் தமிழை கற்றுத் தேர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story