கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை


கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை
x
தினத்தந்தி 11 May 2022 7:07 PM GMT (Updated: 11 May 2022 7:07 PM GMT)

கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்ததற்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்க தலைவர்கள் சங்க அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான காசோலைகளில் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவு பிறபித்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர், அனைத்து கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், கோவை மாவட்டம், வெங்கட்டாபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் செந்தில்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் அரவிந்த்பாண்டியன், வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆஜராகி, ‘‘தமிழ்நாடு அரசின் இந்த சட்டம் தவறானது. கூட்டுறவு சங்க சட்டம் பிரிவு 84- ன்படி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் 84-வது பிரிவின்படி அவ்வாறு தடை செய்து சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு அதிகாரமில்லை’’ என்று வாதிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு விதித்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Next Story