தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு


தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை -அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 11 May 2022 7:13 PM GMT (Updated: 11 May 2022 7:13 PM GMT)

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாமல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டே போவது மிகுந்த கவலை அளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டாக குற்றங்களே நடைபெறவில்லை என்று சட்டமன்றத்தில் பேசினால் போதுமா? ஒவ்வொரு நாளும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் அரங்கேறுகிறது. கொலை, கொள்ளை என்று தமிழகம் அதகளப்படுகிறது.

தங்க நகைக்கடன் தள்ளுபடி

தமிழக அரசுக்கு முக்கியமான பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆதீனங்கள் காவடியில் போகலாமா வேண்டாமா? மதுரை மருத்துவ கல்லூரி டீனை சமஸ்கிருத வார்த்தையைச் சொல்லக் கேட்டார் என்ற காரணம் காட்டி நீக்கலாமா? வேண்டாமா? என்ற ரீதியில் பல கவலைகள் இருப்பதால், சட்டம்-ஒழுங்கை பற்றி கவலைப்பட நேரம் இல்லை.

அதே நேரத்தில் பெண்களுக்கு தருவதாக சொன்ன உரிமைத் தொகை என்ன ஆச்சு? தங்க நகைக்கடன் தள்ளுபடி வழங்குவது என்ன ஆச்சு? பெட்ரோல் விலை குறைப்பேன் என்ற வாக்குறுதி என்ன ஆச்சு? இது மட்டுமில்லாது மக்களை அச்சுறுத்தி வாயை மூட வைக்க நடத்தப்படும், ‘லாக் அப்’ மரணங்கள்.

மகளிருக்கும், குழந்தைகளுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் அச்சுறுத்தல் தொடருமானால் பா.ஜ.க. மக்களை ஒன்று திரட்டும், வீதிக்கு வந்து போராடும் என்பதை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story