‘க்யூ ஆர்’ கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை அறிமுகப்படுத்தியது தெற்கு ரயில்வே


‘க்யூ ஆர்’ கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை அறிமுகப்படுத்தியது தெற்கு ரயில்வே
x
தினத்தந்தி 11 May 2022 7:13 PM GMT (Updated: 2022-05-12T00:43:58+05:30)

தானியங்கி இயந்திரங்களில் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை,

ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்ட்டர்களில் நிற்பதற்கு பதிலாக, தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில் நிலையங்களில் 99 தானியங்கி இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இந்த தானியங்கி இயந்திரங்களில் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறுதல், சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்தல் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்தல் உள்ளிட்ட சேவைகளை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story