தொடர்ந்து கஞ்சா விற்பனை; சொத்துக்கள் முடக்கப்படும் - தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை


தொடர்ந்து கஞ்சா விற்பனை; சொத்துக்கள் முடக்கப்படும் - தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 7:45 PM GMT (Updated: 2022-05-12T01:15:35+05:30)

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்கள் முடக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

மதுரை,

மதுரை எஸ்.பி. அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது இனிமேல் குற்ற விசாரணையுடன் நிதி குறித்த விசாரணையும் நடத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அவர்களின் வங்கிக்கணக்கு மட்டுமல்லாது சொத்துக்களும் முடக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். 

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை அவ்வாறு 11 பேரின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Next Story