மாநில செய்திகள்

கோவில்களுக்கு வரவேண்டிய ரூ.175 கோடி வசூல் அமைச்சர் சேகர்பாபு தகவல் + "||" + Rs 175 crore to be collected for temples, said Minister Sekarbabu

கோவில்களுக்கு வரவேண்டிய ரூ.175 கோடி வசூல் அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவில்களுக்கு வரவேண்டிய ரூ.175 கோடி வசூல் அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் வாடகை, குத்தகை தொகை ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி கணினி வழியாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 1-ந்தேதி முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.


கோவில்களில் அசையாச் சொத்துக்களுக்கு வசூலிக்கப்படும் பசலி ஆண்டு வருகிற ஜூன் 30-ந்தேதியோடு முடிவடைகிறது. இந்த பசலி ஆண்டில் வசூல் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை ரூ.175 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது.

மண்டல வாரியாக

மண்டல வாரியாக, இணை கமிஷனர்கள் சென்னை-1-க்கு ரூ.26.68 கோடி, சென்னை-2-க்கு ரூ.21.21 கோடி, திருச்சி ரூ.14.58 கோடி, காஞ்சீபுரம் ரூ.11.75 கோடி, மயிலாடுதுறை ரூ.10.69 கோடி, நாகப்பட்டினம் ரூ.10.36 கோடி, மதுரை ரூ.9.2 கோடி, தூத்துக்குடி ரூ.8.87 கோடி, திண்டுக்கல் ரூ8.84 கோடி, நெல்லை ரூ.7.3 கோடி, வேலூர் ரூ.6.83 கோடி, கோவை ரூ.6.08 கோடி, கடலூர் ரூ.5.96 கோடி, சேலம் ரூ.5.91 கோடி, தஞ்சாவூர் ரூ.5.42 கோடி, ஈரோடு ரூ.5.14 கோடி, சிவகங்கை ரூ.3.08 கோடி, திருவண்ணாமலை ரூ.2.81 கோடி, திருப்பூர் ரூ.2.57 கோடி, விழுப்புரம் ரூ.1.61 கோடி என வசூல் செய்யப்பட்டுள்ளது.

10 முக்கிய கோவில்கள்

கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ரூ.5.4 கோடி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.4.11 கோடி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் ரூ.4.06 கோடி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் ரூ.2.82 கோடி, பூங்காநகர் ஏகாம்பரேசுவரர் கோவில் ரூ.2.72 கோடி, சென்னை பாடி திருவல்லீசுவரர் கோவில் ரூ.2.15 கோடி, சென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவில் ரூ.2.1 கோடி, திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் ரூ.1.91 கோடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.1.91 கோடி, நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ரூ.1.61 கோடி இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கையாலும் கோவில்களின் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். எனவே, கோவில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது அமைச்சர் பேச்சு
தொழிலாளர்கள் நலனை காக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன் பேசினார்.
2. தமிழகத்தில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 10 இடங்களில் ஏற்றுமதி மையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.
3. கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்த சட்டமசோதா சட்டசபையில் அமைச்சர் அறிமுகம்
தமிழகத்தில் கழிவுநீர் அகற்றும் நடவடிக்கையை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டமசோதாவை சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்துள்ளார்.
4. அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு முறையாக பாதுகாப்பு அளித்தது
அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. அரசு முறையாக பாதுகாப்பு அளித்தது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. தமிழகத்தில் இருந்து 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச்சந்தைக்கு விற்பனை
‘‘தமிழகத்தில் பற்றாக்குறை நீங்கி உபரியில் மின் உற்பத்தி இருக்கிறது. 4.5 லட்சம் யூனிட் மின்சாரம் வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது’’ என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.