ராஜபக்சேவுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்க கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Dr. Anbumani Ramadoss insists that India should never grant asylum to Rajapaksa
ராஜபக்சேவுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்க கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்து உள்ளது. அடக்கு முறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது.
திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த ராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச்சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2009-ம் ஆண்டு ஈழ போரில் லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.
தண்டனை பெற்றுத்தர வேண்டும்
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.