தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு


தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
x
தினத்தந்தி 12 May 2022 5:49 AM GMT (Updated: 12 May 2022 5:49 AM GMT)

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

சென்னை,

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

இந்நிலையில் 3 நாட்கள் குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,835க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,000 விற்பனை செய்யப்படுகிறது.

Next Story