வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு


வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு
x
தினத்தந்தி 12 May 2022 7:01 PM GMT (Updated: 12 May 2022 7:01 PM GMT)

வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்வு நடந்து முடிந்த பிறகு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் விரைவில் தொடங்கும். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. காலை சிற்றுண்டி திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரம் மாற்றுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. முதல்-அமைச்சரிடம் கலந்து பேசிதான் முடிவெடுப்போம். மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் படிக்க வருவதற்கு உணவு தடையாக இருக்கக்கூடாது என மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். காலையில் பசியால் வாடும் மாணவர்கள் பாடத்தை கவனிக்க முடியாது என்ற அடிப்படையில், இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story