மதுரை: சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து...!


மதுரை: சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து...!
x
தினத்தந்தி 13 May 2022 5:05 AM GMT (Updated: 2022-05-13T10:35:45+05:30)

மதுரை அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்திற்கு உள்ளானது.

மதுரை,

மதுரை பாலரங்காபுரம் லாரி குடோனில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி லாரி  ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி அரசரடி பிரதான சாலையில்  வந்து கொண்டிருந்தது.

அப்போது  எதிபாராத விதமாக  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.  இந்த விபத்தில் உயிரிழப்பும் எதுவும் ஏற்படவில்லை. 

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story